பொன்னியின் செல்வன் -2′ டிரைலர் லோடிங்.. வைரலாகும் கிளிம்ப்ஸ் வீடியோ!!
பிரபுதேவாவின் 60வது படம்.. டைட்டில், மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் பிரபு தேவா நடிக்கும் 60-வது படம் குறித்த டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பிரபு தேவாவின் 60-வது திரைப்படத்தை இயக்குபவர் வினோ வெங்கடேஷ். இவரது இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு ’வுல்ஃப்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. அம்பரீஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார் என்பதும் லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு பணி செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபுதேவாவுடன் அனுசுயா பரத்வாஜ், ராய் லட்சுமி, வசிஷ்டா சிம்ஹா, ரமேஷ் திலக், அஞ்சு குரியன், ஸ்ரீ கோபிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாக்கி வருகிறது என்பதும் இந்த படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும், குறிப்பிடத்தக்கது.