‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் புதிய ரிலீஸ் போஸ்டர்.. மரண மாஸ் லுக்கில் சிம்பு!

 ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் புதிய ரிலீஸ் போஸ்டர்.. மரண மாஸ் லுக்கில் சிம்பு!

கௌதம் வாசுதேவ் மேனன் – ஏ.ஆர்.ரஹ்மான் – சிம்பு கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. ‘விண்ணை தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையாடா’ படங்களுக்குப் பிறகு உருவாகியிருக்கும் இந்த காம்போவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஐசரி கணேசன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சித்தி இதானி நாயகியாக நடிக்கிறார்.

ஏற்கனவே இந்த படத்தின் பல லுக் போஸ்டர்கள் & முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இன்று படத்தின் ரிலீஸ் தேதி பதித்த திரையரங்க ரிலீஸ் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நெருப்பு சூழ்ந்த வயலில் சிம்பு கையில் தொரத்தி கம்புடன் ஆக்ரோஷமான தோற்றத்தில் இந்த போஸ்டரில் தோன்றியுள்ளார்.

இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்ஃக் மியூசிக் நிறுவனம் ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 4 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !