அனல் பறக்கும் அதிரடி காட்சிகளுடன் விஷால் நடிக்கும் ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் ட்ரைலர்!

 அனல் பறக்கும் அதிரடி காட்சிகளுடன்  விஷால் நடிக்கும் ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் ட்ரைலர்!

விஷால் போலீசாக மிரட்டி உள்ள வீரமே வாகை சூடும் படத்தின் ட்ரெய்லர் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. அதிரடி ஆக்ஷன், காதல், ரொமான்ஸ் என்று பட்டையைக் கிளப்பியுள்ளார் விஷால்.

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வீரமே வாகை சூடும். இந்த படத்தை அவரே தயாரித்துள்ளார். து.பா.சரவணன் இந்த படத்தை இயக்கி உள்ளார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். நடிகர் யோகி பாபுவும் நடித்துள்ளார். கடந்த டிசம்பரில் இந்த படத்தின் Rise of A Common Man தீம் பாடல் வெளியாகி இருந்தது.

இந்த படம் ரசிகர் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் என்று இந்த டிரைலர் மூலம் தெளிவாக தெரிகிறது. சாதாரண மனுஷனுக்கு வரும் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக வெறித்தனமாக சம்பவம் செய்துள்ளார் விஷால். விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி மற்றும் காமெடியில் யோகிபாபு நடித்துள்ளார்.

இந்த நிலையில் இத்திரைப்படம் வரும் 26-ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு தியேட்டரில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார் நடிகர் விஷால். இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதே நாளில் இந்த திரைப்படம் சாமான்யடு என்ற பெயரில் தெலுங்கு மொழியில் வெளியாக உள்ளது.

  • 4413 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !