ஐதராபாத்துக்கு பறத்த விஷால் பட குழு! எதற்கு தெரியுமா ?

 ஐதராபாத்துக்கு பறத்த  விஷால் பட குழு! எதற்கு தெரியுமா ?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவருடைய 31வது படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார். இவர் எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தை இயக்கி பல விருதுகளை பெற்றார்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் திரைப்பட படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அங்கு விஷால் 31 படத்தின் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்கள்.

அங்கு சண்டைக்காட்சிகள் உள்பட படத்தின் அனைத்து காட்சிகளை ஒரே கட்டத்தில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

நடிகர் விஷால் இரும்புத்திரை படத்திற்காக, தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியிடம் ரூபாய் 3 கோடி கடன் பெற்றதாகவும், இந்த தொகையை உரிய நேரத்தில் திருப்பி கொடுத்த பின்னரும், கடன் பெற்றதாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து பெறப்பட்ட உறுதி மொழி பத்திரத்தை கொடுக்கவில்லை என காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 11 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !