‘பத்தல பத்தல..’வெறித்தனமா இருக்கு.. #விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் !

 ‘பத்தல பத்தல..’வெறித்தனமா இருக்கு.. #விக்ரம் படத்தின்  ஃபர்ஸ்ட் சிங்கிள் !

கமலின் விக்ரம் படம் குறித்த புதிய போஸ்டரால் ரசிகர்கள் துள்ளிக் குதிக்கத் தொடங்கியுள்ளனர். இன்றிரவு 7 மணிக்கு விக்ரம் படத்திலிருந்து முதல் சிங்கிள், கமல் குரலில் அனிருத் இசையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல் நடிக்கும் விக்ரம் படத்தை அவரது தீவிர ரசிகரும், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனருமான லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் மிரட்டக் கூடியவர் என்பதால் லோகேஷ் + கமலின் கூட்டணியின் விக்ரம் படத்தை சினிமா ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

லோகேஷ், கமலை தவிர்த்து அனிருத், கே.ஜி.எஃப். ஸ்டன்ட் டைர்க்டர்கள் அன்பறிவு, பகத் பாசில், விஜய் சேதுபதி என தலைசிறந்த கலைஞர்களும் படத்தில் இணைந்திருப்பதால் இந்தப் படம் ப்ளாக் பஸ்டர் ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தப் படத்திற்கு ‘ஜல்லிக்கட்டு’ படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் விக்ரம் படத்தின் முதல் சிங்கிள் பாடல், இன்று மே 11 ஆம் தேதி இரவு 7 மணிக்கு வெளியாகியுள்ளது. 6.30 மணிக்கே ஐ டியூன்ஸில் இந்த பாடல் வெளியாகி விட்டது.

  • 16 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !