விஜய்யின் பிறந்தநாள் பரிசு ; ‘#வாரிசு’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு!!

 விஜய்யின் பிறந்தநாள் பரிசு ; ‘#வாரிசு’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு!!

விஜய், தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தெலுங்கில் ’வாரிசுடு’ என தலைப்பில் உருவாகிவரும் இப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. குடும்ப பின்னணி படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (21.06.2022) வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது. 

இந்நிலையில் விஜய் தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு விஜய்க்கு ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ‘வாரிசு’ படக்குழு, படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. கலர்ஃபுல்லாக வெளிவந்திருக்கும் இப்போஸ்டரில் விஜய்யோடு சில குழந்தைகளும், கரும்புகளும் இடம்பெற்றிருக்கின்றன. விஜய் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் வெளியாகியுள்ள இப்போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

  • 124 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !