போயஸ்கார்டன் to ஸ்டூடியோ; ரிகர்சலுக்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கைதட்டி பாடல்களை ரசித்தார்!
‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் முதல் பாடல் ; வெளியான சூப்பர் அப்டேட் !!

தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகர்களில் ஒருவராகத் திகழும் நடிகர் சிலம்பரசன்.TR மாநாடு திரைப்படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்தடுத்த படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். முன்னதாக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து பத்து தல படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதனிடையே விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை தொடர்ந்து 3வது முறையாக இணைந்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான்-கௌதம் வசுதேவ் மேனன்-சிலம்பரசன்.TR கூட்டணியின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
பிரபல இளம் தெலுங்கு நடிகையான சித்தி இத்நானி வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் சிலம்பரசனுடன் இணைந்து ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, சித்திக், நீரஜ் மாதவ் ஆகியோரும் இணைந்து வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளனர்.
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி.கே.கணேஷ் தயாரிக்கும் வெந்து தணிந்தது காடு படத்திற்கு சித்தார்த்தா நுண்ணி ஒளிப்பதிவு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். முன்னதாக வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் பாடல் நாளை மே 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது கூடுதல் தகவலாக வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் பாடல் “காலத்துக்கும் நீ வேணும்” பாடலாசிரியர் தாமரையின் வரிகளில் நாளை மாலை 6:30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.