ட்ரோலுக்கு பயந்து தலைப்பை மாற்றிய சிம்பு படக்குழு!

 ட்ரோலுக்கு பயந்து தலைப்பை மாற்றிய சிம்பு படக்குழு!

‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து கெளதம் மேனன் – சிம்பு இருவரும் மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளனர்.

வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார். பாடலாசிரியராக தாமரை பணிபுரிந்து வருகிறார்.

‘நதிகளிலே நீராடும் சூரியன்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் தலைப்பு தற்போது தணிந்தது காடு என வைத்தார்களாம்.

ஆனால் கதைக்களம் மாற்றப்பட்ட நிலையில் பெயரை மாற்ற வேண்டிய சூழல் உருவானது. இதற்காக முதலில் அக்னி குஞ்சொன்றைக் கண்டேன் என்ற பெயரைதான் யோசித்தார்களாம்.

ஆனால் அந்த பெயரை வைத்தால் ட்ரோல்கள் உருவாகும் என்பதால்தான் வெந்து தணிந்தது காடு என வைத்தார்களாம். இரண்டுமே பாரதியார் பாடலில் வரும் வரிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 16679 Views

    In and Out Staff

    1 Comment

    • அப்படி என்ன சொல்ல வரீங்க தெரியல ஏன் அக்னி குஞ்சொன்று கண்டேன் வைங்க

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !