பிக்பாஸ் முகென் நடிக்கும் ‘வேலன்’ பட மோஷன் போஸ்டர்..!

 பிக்பாஸ் முகென் நடிக்கும் ‘வேலன்’ பட மோஷன் போஸ்டர்..!

’பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த முகேன் ராவ் ‘வெற்றி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இப்படத்தை, கடந்த 2011 ஆம் ஆண்டு நானி, நித்யாமேனன் நடிப்பில் வெளியான ‘வெப்பம்’ படத்தின் இயக்குநர் அஞ்சனா அலிகான் இயக்கி வருகிறார்.

இவர் கவுதம் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் முகேன் ராவ் நடிக்கும் ‘வேலன்’ படத்தின் அறிவிப்பு வெளியானது.

கவின் இயக்கும் இப்படத்தில் பிரபு, சூரி, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சூரி மலையாளியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டரை,  நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். சிங்கிள் கோலி குண்டை வைத்து முகேன் ராவ் மாஸ் காட்டியுள்ளார். இந்த மோசடின் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

  • 423 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !