வசந்தபாலன் – அர்ஜுன்தாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் இதோ!

 வசந்தபாலன் – அர்ஜுன்தாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் இதோ!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வசந்தபாலன், நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாக ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் துஷாரா விஜயன் நடிக்கிறார்.

இயக்குநர் வசந்தபாலன் தன்னுடைய பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ள அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனா இரண்டாம் அலை காரணமாகப் பாதியில் தடைப்பட்டது.

தற்போது இயல்புநிலை திரும்பிவருவதையடுத்து மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள படக்குழு, முழுவீச்சில் படப்பிடிப்பு நடத்திவருகிறது.

இந்த நிலையில், படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, வசந்தபாலன் – அர்ஜுன்தாஸ் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு அநீதி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைச் சிறு டீசர் வடிவில் படக்குழு வெளியிட்டுள்ளது.

  • 12 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !