விஜய்யின் வாரிசு முதல் பாடல் குறித்த சூப்பர் அப்டேட்!

 விஜய்யின் வாரிசு முதல் பாடல் குறித்த சூப்பர் அப்டேட்!

பிரபல தமிழ் நடிகராக இருந்த தளபதி விஜய், தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். ஏனெனில் அவரது படங்கள் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை குவிக்கின்றன. இந்த ஸ்டைலிஷ் நடிகருக்கு உலகம் முழுவதும் பரவலான ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது அவர் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். வம்சி இயக்கும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகிறது.

தகவல்களின்படி, வாரிசு படத்தின் நான்காவது ஷெட்யூல் படப்பிடிப்பு ஜூலை 4 ஆம் தேதி தொடங்கியுள்ளது. ஜூலை 25-ஆம் தேதி வரை இந்த ஷெட்யூல் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இப்படத்தின் முதல் பாடலின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக வாரிசு படத்தின் நடன இயக்குனர் ஒருவர் பிரபல இணையதளத்திடம் தெரிவித்துள்ளார். 

தளபதி விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரையும் உள்ளடக்கிய மற்றொரு பாடலின் முன்னோட்டம் படமாக்கப்பட்டுள்ளது, விரைவில் வெளியிடப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும், சிங்கிள் சாங் பற்றிய கூடுதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை.

  • 3809 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !