பைலட்டுடன் 4வது திருமணமா?ஷாக் கொடுத்த வனிதா விஜயகுமார்!

 பைலட்டுடன் 4வது திருமணமா?ஷாக் கொடுத்த வனிதா விஜயகுமார்!

நடிகை வனிதா விஜயக்குமார் வட இந்தியாவை சேர்ந்த பைலட்டை நான்காவதாக திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமா குடும்பத்தை சேர்ந்த நடிகை வனிதா குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார்.

பின்னர் பருவ வயதில் ஹீரோயினாக ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் அவர் ஹீரோயினாக நடித்த படங்கள் அந்த அளவுக்கு கைக்கொடுக்கவில்லை.

நடிகை வனிதா விஜயகுமாருக்கு ஏற்கனவே 3 முறை திருமணம் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது நான்காவது முறையாக ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் பரவி வருகிறது இந்த வதந்திக்கு வனிதா விஜயகுமார் .

இதுகுறித்து வனிதா விஜயகுமார் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது ’எனக்கு திருமணம் நடந்ததாக பரவி வரும் செய்தியில் உண்மையில்லை, தயவுசெய்து வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் நான் தற்போது சிங்கிள் மட்டும் அவைலபிள்என்று பதிவு செய்துள்ளார் வனிதா விஜயகுமார்.

ஏற்கனவே ஆகாஷ், ஆனந்தராஜன் ஆகிய இருவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும். இதனை தொடர்ந்து நடன இயக்குநர் ராபர்ட்டுன் டேட்டிங்கில் இருந்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள் என்று கூறப்பட்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர் என்பதும், வனிதாவுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

 • 15 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !