பொன்னியின் செல்வன் -2′ டிரைலர் லோடிங்.. வைரலாகும் கிளிம்ப்ஸ் வீடியோ!!
வாணி ஜெயராம் மறைவு குறித்து பணிப்பெண் அதிர்ச்சி தகவல்!!!

பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) காலமானது திரையுலகினரிடையே அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த வாணி ஜெயராம் அவரது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வாணி ஜெயராம் வீட்டில் பணிபுரியும் மலர்க்கொடி என்பவர் என்ன நடந்தது என்பதை செய்தியாளர்களிடம் விவரித்துள்ளார். மலர்க்கொடி கூறுகையில், “எப்பொழுதும் காலை 10 மணிக்கு வந்து வேலை செய்து முடித்துவிட்டு மதியம் 12 மணிக்கு திரும்பி விடுவேன். அது போலத்தான் இன்று காலையிலும் 10 மணிக்கு வந்தேன். வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினேன். திறக்கவில்லை. தொடர்ந்து ஐந்து முறை அழுத்தினேன். அப்போதும் திறக்கவில்லை.
பின்பு எனக்கு சந்தேகம் வந்து வாணி ஜெயராமுக்கு போன் செய்தேன். அவங்க எடுக்கவில்லை. எனது கணவரிடம் சொல்லி போன் செய்ய சொன்னேன். அப்போதும் அவங்க எடுக்கவில்லை. பிறகு வீட்டின் அருகே உள்ளவரிடம் தகவல் சொல்லி கதவை திறந்தோம். உள்ளே போய் பார்த்தபோது தலையில் (நெற்றியில்) காயங்களுடன் கீழே விழுந்து கிடந்தாங்க. நல்ல உடல் நலத்தோடு தான் இருந்தாங்க. என்னுடைய அம்மா மாதிரி அவங்க. நாங்க தாய் பொண்ணு போலதான் பழகுவோம். இந்த வீட்டில் ” எனக் கூறியுள்ளார்.