வலிமை இரண்டாவது சிங்கிள் அப்டேட் !! ட்ரெண்டாகும் #ValimaisecondSingle!

 வலிமை இரண்டாவது சிங்கிள் அப்டேட் !! ட்ரெண்டாகும் #ValimaisecondSingle!

‘வலிமை’ படத்தின் இரண்டாம் பாடல் ப்ரோமோ வீடியோ இன்று மாலை வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாக நடித்துள்ளார். யுவன் இசையமைக்க தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்திருக்கிறார். ‘வலிமை’ பொங்கலையொட்டி வெளியாகிறது. இப்படத்தின், முதல் பாடலான ‘நாங்க வேற மாரி’ பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாடல் ப்ரோமோ இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவிருக்கிறது என்றும் அதில், பாடல் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். சோனி மியூசிக்கும் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.

  • 11 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !