வலிமை ரிலிஸ் தேதி இதுதான்… வெளிவந்த புதிய அப்டேட் !

 வலிமை ரிலிஸ் தேதி இதுதான்… வெளிவந்த புதிய அப்டேட் !

நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு எச். வினோத் – அஜித் – போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்க, வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பானது கரோனா பரவல் காரணமாக தடைப்பட்டது. இருப்பினும், மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, ஒரு சண்டைக் காட்சியைத் தவிர்த்து எஞ்சிய காட்சிகளுக்கான படப்பிடிப்பை நிறைவுசெய்தது. இந்த நிலையில், ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த மோஷன் போஸ்டர், யூ-டியூப் தளத்தில் இந்திய அளவில் அதிகபட்ச லைக்ஸ்களைப் பெற்ற மோஷன் போஸ்டர் எனும் சாதனையைப் படைத்துள்ளது. தீபாவளி தினத்தன்று படத்தைத் திரைக்கு கொண்டுவரும் யோசனையில் உள்ள படக்குழு, எஞ்சியுள்ள சண்டைக்காட்சியை விரைந்து படமாக்கத் திட்டமிட்டுள்ளது.

இப்போது வலிமை திரைப்படம் கிட்டத்தட்ட முடிந்து ரிலிஸூக்கு தயாராகியுள்ளது. இன்னும் கடைசிக் கட்ட படப்பிடிப்பு மட்டுமே நடத்த வேண்டியுள்ளது. அதற்காக இப்போது ரஷ்யாவுக்கு சென்று படப்பிடிப்பை நடத்த உள்ளது ஹெச் வினோத் தலைமையிலான படக்குழு.

இந்நிலையில் படத்தை அக்டோபர் 14 ஆம் தேதியான ஆயுத பூஜை விடுமுறைக்கு வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதே தேதியில்தான் சிவகார்த்திகேயனின் டாக்டர் படமும் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 4459 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !