பிரபல நடிகர் வடிவேலு போலி கௌரவ டாக்டர் பட்டம் சான்றிதழ் மூலம் ஏமாற்றப்பட்டரா!?

 பிரபல நடிகர் வடிவேலு போலி கௌரவ டாக்டர் பட்டம் சான்றிதழ் மூலம் ஏமாற்றப்பட்டரா!?

வைகைப் புயல் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் வடிவேலு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் காமெடி சேனல்களில் ஒளிபரப்பாகும் அவரது காமெடி காட்சிகள்  மக்களை மகிழ்வித்துவருகின்றன. கடந்த சில வருடங்களாக தெனாலிராமன், எலி, கத்தி சண்டை, மெர்சல் என சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

இதனால் நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு நாயகனாக நடித்திருந்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் அவரது கம்பேக் படமாக இருக்கும் என ரசிகர்கள் நம்பினார்கள். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை தலைநகரம், மருதமலை படங்களின் இயக்குநர் சுராஜ் இயக்கியிருந்தார்.

சமூக சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில், பொழுதுபோக்கு பிரிவின் கீழ் வடிவேலுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. மேலும் துணை நடிகர் கோகுலுக்கு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதை பாராட்டும் வகையில் சிறப்பு விருதும் தரப்பட்டது.

ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் இயங்கி வரும் இந்த அமைப்பு முன்னதாக நடிகர் ராகவா லாரன்ஸிற்கு சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் வடிவேலு பட்டம் பெறும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் வடிவேலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வடிவேலுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய சமூக சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில்,முறையாக பதிவு செய்யப்படாத இயக்கம் என்றும் வடிவேலுக்கு வாங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டம் செல்லதும் என்றும் ஒரு தகவல் பரவு வருகின்றது .

  • 8 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !