பொன்னியின் செல்வன் -2′ டிரைலர் லோடிங்.. வைரலாகும் கிளிம்ப்ஸ் வீடியோ!!
வாத்தி’ நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!!

வாத்தி திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சியைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.’திருச்சிற்றம்பலம்’, ‘நானே வருவேன்’ வெற்றிப் படங்களுக்கு பிறகு நடிகர் தனுஷ் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடித்துள்ள ‘வாத்தி’ படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியானது.
தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரில் இந்தப் படம் பிரமாண்டமாக வெளியிடப்ப்பட்டது.சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இதுவரை இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.இந்நிலையில், இப்படத்தின் நீக்கப்பட்ட காட்சியைப் படக்குழு வெளியிட்டுள்ளது.