ட்ரெண்டிங்கில் #வாரிசு பட டைரக்டர்!! அப்படி என்ன ஸ்பெஷல் இன்றைக்கு?

விஜய் தற்போது டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 66 வது படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு வாரிசு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் மற்றும் மூன்று லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இது ஒரு விமர்சனங்களை சந்தித்தாலும், விஜய் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது வரை இந்த போஸ்டர்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சமீபத்தில் ஐதராபாத்தில் துவங்கிய வாரிசு படத்தின் லேட்டஸ்ட் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளதாகவும், 3 வார இடைவெளிக்கு பிறகு விஜய் மீண்டும் சென்னை திரும்பி உள்ளார்.
தெலுங்கில் முன்னணி டைரக்டராக இருக்கும் வம்சி பைடபள்ளி இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.வாரிசு பட டைரக்டர் வம்சி பைடபள்ளியின் பிறந்த நாள் இன்று. அதனால் தான் ரசிகர்கள் அப்டேட் கேட்டு வருகின்றனர்.