சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் வீடியோ இன்று மாலை வெளியாகிறது…

 சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் வீடியோ இன்று மாலை வெளியாகிறது…

சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் வீடியோ இன்று மாலை வெளியாகிறது. இதுகுறித்த அறிவிப்பை வாடிவாசல் பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்திற்கு மொத்தம் 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த படம் மற்றும் சிறந்த பின்னணி இசைஆகிய பிரிவுகளுக்காக சூரரைப் போற்று படத்திற்கு தேசிய விருது அளிக்கப்படவுள்ளது.

இதையொட்டி சூர்யாவுக்கு பல்வேறு திரை பிரபலங்கள் வாழ்த்து கூறியுள்ளார்கள். தம்பி சூர்யா என அழைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சூர்யா நடித்து வரும் வாடிவாசல் படத்தின் அப்டேட்டை படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டுள்ளார். இதன்படி வாடிவாசல் படத்திற்காக காளைகளுடன் சூர்யா பயிற்சி மேற்கொண்ட காட்சிகள், பிறந்த நாள் பரிசாக ரசிர்களுக்கு இன்று மாலை 5.30-க்கு வெளியாக உள்ளது.

  • 3 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !