முரட்டு காளையுடன் தேசிய விருது நாயகன் சூர்யா.. வைரலாகும் வாடிவாசல் வீடியோ….

 முரட்டு காளையுடன்  தேசிய விருது நாயகன் சூர்யா.. வைரலாகும் வாடிவாசல்  வீடியோ….

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ள திரைப்படம் என்னவென்றால், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள “வாடிவாசல்” திரைப்படம் தான். இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு படத்திற்காக ரசிகர்கள் காத்துள்ளனர்.

இந்த படத்தை, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான டெஸ்ட் ஷூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டு அரங்கம் ஒன்றை அமைத்து அங்கு சில நாட்கள் நடைபெற்றது.

ஈ.சி.ஆர் ரோட்டில் எடுக்கப்பட்ட டெஸ்ட் ஷூட் சிறப்பாக வந்திருப்பதால் அதனை வீடியோவாக சூர்யாவின் பிறந்த நாளான இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது அந்த சில நிமிட காட்சி வெளியிடபட்டுள்ளது.

  • 2 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !