ஸ்ரேயா கோஷல் வெளியிட்ட #UnseenPhoto..இப்போ தானே பாப்பா பொறந்துச்சு அதுக்குள்ளவா ?

 ஸ்ரேயா கோஷல் வெளியிட்ட #UnseenPhoto..இப்போ தானே பாப்பா பொறந்துச்சு அதுக்குள்ளவா ?

தமிழ், தெலுங்கு,இந்தி என இந்தியாவின் முன்னணி பாடகிகளில் ஒருவரான ஸ்ரேஷா கோஷல்  கடந்த 2015-ஆம் ஆண்டு அவரின் நண்பரும் தொழிலதிபருமான ஷைலாதித்யா முகோபாத்யாயாவை திருமணம் செய்துகொண்டார்.

கடந்த மார்ச் 4 ஆம் தேதி தான் கர்ப்பம் தரித்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஷ்ரேயா கோஷலுக்கு இன்று மதியம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.அந்த ட்விட்டரில்,

கடவுள் அருளால் இன்று மதியம் எங்களுக்கு விலைமதிப்பற்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுபோன்ற ஒரு மகிழ்ச்சியான உணர்வை இதற்கு முன்பு அடைந்ததில்லை. நான், எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அளவுகடந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். எனக் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தை பிறந்து ஒரு மாதம் தான் ஆகிறது அதற்குள் ஷ்ரேயா நீச்சல் குளத்தில் கவலை மறந்து ஆட்டம் போட்ட புகைப்படத்தை வெளியிட்டு ” ஒரு மகிழ்ச்சியான தருணம். இது பிப்ரவரியில்… நான் இந்த குளத்தில் மிதந்து கொண்டிருந்தபோது, என்னுள் தேவ்யான் மிதந்து கொண்டிருந்தான்.” என கேப்ஷன் கொடுத்து throwback புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இருந்தாலும் இந்த புகைப்படத்தை பார்த்ததும், ” இப்போ தானே பாப்பா பொறந்துச்சு அதுக்குள்ள இப்படி கும்மாளமா ” என எல்லோரும் செம ஷாக்காகி விட்டனர். 

  • 38 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !