சித் ஸ்ரீராம் குரலில் ‘#உடன்பிறப்பே’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

 சித் ஸ்ரீராம் குரலில் ‘#உடன்பிறப்பே’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த ஜோதிகா, தற்போது பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டும் நடித்துவருகிறார்.

அந்த வகையில், ‘கத்துக்குட்டி’ பட இயக்குநரான இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘உடன்பிறப்பே’ படத்தில் தற்போது நடித்துள்ளார். சசிகுமார், சமுத்திரக்கனி, கலையரசன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இது, நடிகை ஜோதிகாவின் 50வது திரைப்படமாகும்.

இப்படம் ஆயுதபூஜை தினமான அக்டோபர் 14ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. அதற்கான முன்னோட்டமாக படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களை வரிசையாக படக்குழு வெளியிட்டுவருகிறது. அந்த வகையில், ‘ஒத்தபனை காட்டேரி…; என்ற பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இப்பாடலுக்கான வரிகளை யுகபாரதி எழுத, சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.  

  • 68 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !