கோல்டு’ திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியானது! 

 கோல்டு’ திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியானது! 

‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அவர் இயக்கிய மலையாள படமான ‘பிரேமம்’ தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு அல்போன்ஸ் தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார். 

கோல்டு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா முதன்மை வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது.  

இந்தப் படத்தை பிருத்விராஜின் பிருத்விராஜ் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ராஜேஷ் முருகேசன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, ஆனந்த் சி சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிசம்பர் மாதம் 1ஆம் நாள் தமிழ் மற்றும் மலையாளத்தில் ரிலீஸாக உள்ளது.

தற்போது இந்த படத்தின் தணிக்கை சான்றிதழ் விவரம் வெளியாகியுள்ளது. ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது. திரைப்படம் 2 மணி நேரம் 45 நிமிடம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

  • 14 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !