விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ ட்ரெய்லர்… வெளியான புதிய அப்டேட் !

 விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ ட்ரெய்லர்… வெளியான புதிய அப்டேட் !

தமிழ்த் திரையுலகில் ஒரு நடிகரின் பல படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன என்றால் அது விஜய் சேதுபதியின் படங்கள்தான். அவர் நாயகனாக நடித்துள்ள ‘மாமனிதன்’, ‘லாபம்’, ‘கடைசி விவசாயி’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘துக்ளக் தர்பார்’ உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன.

அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுக்க அரசியல் பின்னணி கொண்ட களமாக இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் டெல்லி பிரசாத் தீனதயாளன்.

ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை சன் டிவி பெற்றுள்ள நிலையில், ஓடிடி வெளியிட்டை நெட்ப்ளிக்ஸ் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்டு 31 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 53 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !