‘பொன்னியின் செல்வன்’ படத்தின் அசத்தல் அப்டேட் !! வைரலாகும் பிரபல நடிகையின் போஸ்டர் !!

 ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் அசத்தல் அப்டேட் !!  வைரலாகும் பிரபல நடிகையின் போஸ்டர் !!

அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக்கி வருகிறார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தொடங்கி பலரது கனவு திரைப்படமாக ‘பொன்னியின் செல்வன்’ இருந்துள்ளது. இது சோழர்களின் காலத்தில் நிகழ்ந்த சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கல்கி எழுதிய புனைவுக் கதை ஆகும். இன்று வரை லட்சக்கணக்கான வாசகர்களின் மனம் கவர்ந்த நாவலாக இது விளங்குகிறது.

இந்த கதையை திரைப்படமாக எடுப்பதற்கு இயக்குனர் மணிரத்னம் நீண்ட காலமாக முயற்சித்து வந்தார். செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தை இயக்கிய பிறகு, பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குவதற்கான வேலைகளை மணிரத்னம் தொடங்கினார். அதனை தொடர்ந்து இந்த திரைப்படம் 2 பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தாய்லாந்திலும், வட இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் இதற்கான படப்பிடிப்பு நடந்து வந்தது.

மேலும் மணிரத்னம் இயக்கும் முதல் சரித்திர திரைப்படம் என்பதாலும், மிகப்பெரிய பொருட்செலவில், பல முன்னனி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் திரைப்படம் என்பதாலும் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த திரைப்படம் குறித்த அறிவிப்புகள் அவ்வபோது வெளியாகி வந்த நிலையில், பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தயாரிப்பு நிறுவனமான ‘லைகா’ தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தற்போது முதல் பாகத்திற்கான டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளார் மணிரத்னம். இதனை த்ரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. டப்பிங் பணிகளுக்கு இடையே, கிராபிக்ஸ் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இந்தப் படம் வெளியாகவுள்ளது.

  • 153 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !