நந்தமுரி பாலகிருஷ்ணா & அனில் ரவிபுடியின் படத்திற்கு இசையமைக்கும் எஸ் தமன்…
உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட #ஜோதி!! படக் குழுவினரை பாராட்டிய டிக் டாக் ‘ஜி.பி.முத்து’!

ஜோதி திரைப்படம் வரவிருக்கும் இந்திய தமிழ் மொழி நாடக திரில்லர் திரைப்படமாகும். திரைப்பட வெளியீட்டு தேதி ஜூலை 28, 2022. ஏ.வி. கிருஷ்ண பரமாத்மா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் வெற்றி நாயகனாக நடிக்கிறார். மேலும் ஷீலா, கிருஷா குரூப், மைம் கோபி, எஸ்.பி.ராஜா சேதுபதி, இளங்கோ குமரவேல் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சாமானிய பெண்களுக்கு எதிராக கடலூர் அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம்தான் இந்தப் படத்தின் மையக் கரு. இந்தக் கருவில் உதிர்ந்த கதையோடு, சஸ்பென்ஸ், திரில்லரோடு சேர்ந்த திரைக்கதையில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
எழுத்து, இயக்கம் – ஏ.வி.கிருஷ்ண பரமாத்மா, ஒளிப்பதிவு – சேஷையா, படத் தொகுப்பு – சத்யமூர்த்தி, இசை – ஹர்ஷவர்த்தன் ரமேஷ்வர், பாடல்கள் – கார்த்திக் நேத்தா, நடன இயக்கம் – சுவி குமார், சண்டை பயிற்சி இயக்கம் – ஆர்.சக்தி சரவணன், ஒலி வடிவமைப்பு – டி.உதயகுமார், கிராபிக்ஸ் – Getin dreams studio, DI Colorist – sriram, தயாரிப்பு நிர்வாகம் – கெளரி சங்கர், புகைப்படங்கள் – அஜீத், விளம்பர வடிவமைப்பு – பிரவீன் குமார், பத்திரிகை தொடர்பு – சி.எம்.வின்சன்.
இந்த ஜோதி படத்தை டிக் டாக் பிரபலமான ‘ஜி.பி.முத்து’ பார்த்துவிட்டு படத்தையும், படக் குழுவினரையும் பாராட்டியுள்ளார்.மேலும் குழந்தைகளைக் கடத்தி விற்கும் கும்பல் இன்று அதிகமாகிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இது போன்ற கதை தான் தற்போது நம் நாட்டிற்கு தேவை என்றும் கூறினர்.