தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் காம்போவில் ‘வாத்தி’ படத்தின் முழு பாடல்கள் விவரம்!!
துணிவு முதல் பாடல் ‘லீக்’? அதிர்ச்சியில் படக்குழு!

அஜித் நடிப்பில் உருவாகி உள்ள படம் துணிவு. இயக்குனர் எச்.வினோத் – அஜித் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இதுவாகும். இப்படத்தில் நடிகர் அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இதுதவிர பிக்பாஸ் பிரபலங்கள் மமதி சாரி, பாவனி, அமீர், சிபி ஆகியோரும் துணிவு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். அவரது இசையில் முதல் பாடலான சில்லா சில்லா என்கிற பாடல் வருகிற டிசம்பர் 9-ந் தேதி ரிலீஸ் செய்யப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. பாடல் வெளியாவதற்கு இன்னும் இரு தினங்கள் உள்ள நிலையில், நேற்று இரவு ஆன்லைனில் அப்பாடல் லீக்கானது.
இதனால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. ஆனால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதனை பகிர்ந்து வருகின்றனர். ‘ஆலுமா டோலுமா’ பாடல் போலவே இந்த பாடலும் உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.