அமலா பால் நடிக்கும் ‘தி டீச்சர்’ படத்தின் டிரைலர்!

 அமலா பால் நடிக்கும் ‘தி டீச்சர்’ படத்தின் டிரைலர்!

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை அமலா பால். கடந்த 2010-இல் தமிழ் திரைப்பட துறையில், “வீரசேகரன்’ என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் “சிந்து சமவெளி’, “மைனா’, “தெய்வத் திருமகள்’, “தலைவா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் தனுஷ் உடன் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் பெரும் வெற்றி அடைந்தது. 

தற்போது கதாநாயகியாக தனித்து நடித்து வருகின்றனர். ஆடை என்ற படத்தில் முதன்முறையாக கதாநாயகியாக தனித்து நடித்தார். பின்னர் பல்வேறு ஓடிடி இணையத் தொடர்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அவரது படமான கடாவர் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியானது. தமிழில் வெளியாகி வெற்றி பெரும் பெற்ற கைதி படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘போலா’ படத்தில் நடிக்க அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த படத்தை அஜய்தேவ்கானே இயக்கி நடிக்கவுள்ளார். 

இந்த படத்தில் ஹக்கிம் ஷாஜகான், செம்பன் வினோத் மற்றும் அனு மோன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை விவேக் இயக்கியுள்ளார். இந்த படம் நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்களில் ரிலீஸ் ஆகும் அமலா பாலின் படம் என்பது குறிப்பிடத்தக்க தாகும். மேலும் தி டீச்சர் திரைப்படத்தின் டிரைலர் வீடியோ தற்போது வைரலாகி இணையத்தில் வருகிறது.

  • 8 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !