‘தி க்ரே மேன்’ ஹாலிவுட் பட நடிகர்களுடன் தனுஷ்… வைரலாகும் புதிய ஃபோட்டோ

 ‘தி க்ரே மேன்’ ஹாலிவுட் பட நடிகர்களுடன் தனுஷ்… வைரலாகும் புதிய ஃபோட்டோ

தனுஷ் இடம்பெற்றுள்ள தி க்ரே மேன் படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், அப்படத்தில் உள்ள நடிகர்களுடன் தனுஷ் இடம்பெறும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், பாலிவுட்டிலும் ஷமிதாப், ராஞ்சனா, அட்ராங்கி ரே படங்களில் நடித்து இந்தி வட்டாரத்திலும் தனக்கென ரசிகர்களை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் அடுத்த கட்ட பாய்ச்சலாக, ஹாலிவுட்டிலும் கலக்கத் தொடங்கியுள்ளார் தனுஷ்.

ரூசோபிரதர்ஸ் தயாரித்து இயக்கியுள்ள தி க்ரே மேன் படத்தில் தனுஷுக்கு முக்கிய கேரக்டர் அளிக்கப்பட்டுள்ளது.

தி க்ரே மேன் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்திற்கான புரொமோஷன் பணிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

  • 2 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !