ஆர்யா நடித்த ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ !!
மீண்டும் களத்தில் இறங்கும் தனுஷ்.. வெளியான ‘தி கிரே மேன் 2’ சூப்பர் அப்டேட்!

தி கிரே மேன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து நடிகர் தனுஷ் ஆடியோ மூலம் சுவாரசியத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
நடிகர் தனுஷ் சிறப்பு வேடத்தில் நடித்திருந்த ‘தி கிரே மேன்’ ஆங்கில படம் சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தை ‘கேப்டன் அமெரிக்கா’, ‘அவெஞ்சர்ஸ்’ படங்களை இயக்கிய ருசோ பிரதர்ஸ் இயக்கியிருந்தனர்.
தனுஷ் நடித்துள்ளதால் இந்தப் படத்தை அவரது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் தனுஷின் காட்சிகள் மிகவும் குறைவாக இருந்ததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்த நிலையில் ‘தி கிரே மேன்’ பட இரண்டாம் பாகத்தை அதன் இயக்குநர்களான ருசோ பிரதர்ஸ் அறிவித்தனர். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் இடம்பெறுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே உருவானது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் தனுஷ் ஆடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், ”தி கிரே மேன் உலகம் பெரிதாகிறது. இரண்டாம் பாகம் தயாராகிறது. லோன் வோல்ஃப் தயார். நீங்கள்?” என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து உற்சாகமடைந்த ரசிகர்கள் அவரது பதிவைப் பகிர்ந்து டிரெண்ட் செய்துவருகிறார்கள்.