‘தி பேமிலி மேன் 2 ‘ தடை செய்யக்கோரி மத்திய அரசுக்கு அமைச்சர் கடிதம்!

 ‘தி பேமிலி மேன் 2 ‘ தடை செய்யக்கோரி மத்திய அரசுக்கு அமைச்சர் கடிதம்!

நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வருகிற ஜூன் 4-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இத்தொடரின் டிரெய்லர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் நிறுத்தவோ, தடை செய்யவோ உடனடி நடவடிக்கை தேவை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு, தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

“ஈழ தமிழர்கள், தமிழக தமிழர்களின் உணர்வுகளை இந்த தொடர் பெருமளவு புண்படுத்தி உள்ளது”.”தமிழ் பண்பாட்டை இழிவுப்படுத்தும் கருத்துக்களை கொண்ட இந்த தொடர் ஒளிபரப்புக்கு ஏற்றதாக கருத முடியாது”.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 • 9 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !