‘PS- 1’ படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்துக்கு டப்பிங் கொடுக்கும் ‘சியான்’ விக்ரம் !!படக்குழு வெளியிட்ட வீடியோ!

 ‘PS- 1’ படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்துக்கு டப்பிங் கொடுக்கும் ‘சியான்’ விக்ரம் !!படக்குழு வெளியிட்ட வீடியோ!

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக எடுத்து வருகிறார் என்பதும், இந்தப் படத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற பல முன்ணனி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரும் செப்டம்பர் 30ஆம் தேதி இந்த படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், இராஜராஜசோழன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

‘சியான்’ விக்ரம் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்துக்கு டப்பிங் கொடுக்கும் வீடியோ விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இணையதளத்தில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

  • 3254 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !