தளபதி விஜய்யின் #வாரிசு படத்தின் ஆடியோ அப்டேட் ! குழப்பத்தில் ரசிகர்கள் !!

 தளபதி விஜய்யின் #வாரிசு படத்தின் ஆடியோ அப்டேட் ! குழப்பத்தில் ரசிகர்கள் !!

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். ராதிகா, ஷியாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

ரஞ்சிதமே பாடல் 90 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாவது பாடலும் சிம்பு குரலில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. 2023 பொங்கலுக்கு வெளியாகும் இந்தப் படத்தின் 3வது பாடலுக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் தமனின் ட்விட் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த பதிவில், “நண்பா வாரிசு ஆல்பம்” என பதிவிட்டு தீ, இசைக்கருவிகள் எமோஜிகளை பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் வாரிசு ஆல்பத்தினை கேட்டு தீ மாதிரி இருக்கு நண்பா என்று கூறியதால்தான் தமன் இப்படி ட்விட் போட்டிருப்பாரோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சிலர் வாரிசு படத்தின் இசை வெளியிட்டு விழா எப்போது என கேட்டு வருகின்றனர்

  • 9 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !