விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா ? வைரலாகும் டிவிட்டர் ஸ்கிரின்ஷாட்!!!

 விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் தெரியுமா ? வைரலாகும் டிவிட்டர் ஸ்கிரின்ஷாட்!!!

கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ படங்களுக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கும் படம் ‘பீஸ்ட்’. நடிகர் விஜய்யின் 65-வது படத்தில் ஏ.ஆர். முருகதாஸ், வெற்றிமாறன், சுதா கொங்கரா, மகிழ்திருமேனி என பல இயக்குநர்களின் பெயர்கள் அடிபட நெல்சன் திலீப்குமார்தான் இயக்குநர் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவிக்கப்பட்டது. 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, சென்னை போன்ற இடங்களில் நடந்து கொண்டு வருகிறது.  இந்த படத்தை தொடர்ந்து விஜய், தனது அடுத்த படத்தை யாருடன் செய்யப்போகிறார் என்பதே தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

இந்நிலையில் தனது அடுத்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு விஜய் செய்வார் என பரவலாக தகவல்கள் பரவின. அந்த படத்தை தெலுங்குப்பட இயக்குனர் வம்சி இயக்குவார் என நம்பந்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. 

இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று இயக்குனர் வம்சியின் பிறந்தநாளை முன்னிட்டு பாடகர் க்ரிஷ், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் பொருட்டு விஜய்யின் அடுத்தப்படத்தை இயக்குவதற்கு வாழ்த்துகள் என்று டிவிட் செய்து இருந்தார். 

அந்த டிவிட்டை பாடகர் க்ரிஷ் நீக்கிய பிறகும் அந்த டிவிட்டின் ஸ்கிரின்ஷாட்டை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

இந்த ஸ்கிரின்ஷாட் தற்போது வைரலாகி வருகிறது

  • 3851 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !