‘சொல்றதை விட செய்றது ஈஸி.. ‘ தளபதி65 படம் குறித்த மெகா அப்டேட் !

 ‘சொல்றதை விட செய்றது ஈஸி.. ‘ தளபதி65  படம் குறித்த மெகா அப்டேட் !

நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் 65-வது படம் குறித்த மெகா அப்டேட்டை சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கினார் விஜய். இந்தப் படத்தை ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘தளபதி 65’ என அழைத்து வருகிறது படக்குழு.

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் படம் தளபதி 65. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நாளை விஜய் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் தளபதி 65 முக்கிய அப்டேட் வெளியாகலாம் என ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் “நமக்கு சொல்றத விட செய்றதுதான் ரொம்ப ஈஸி! செஞ்சுடலாமா?” என பதிவிட்டு தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தோடு காத்திருப்பில் உள்ளனர்.

  • 13 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !