‘#தலைவர்169’ படத்தின் தலைப்பு; ரத்தக் கறை படிந்த கத்தியுடன் படக்குழு வெளியிட்ட வெறித்தனமான போஸ்டர்!!!

 ‘#தலைவர்169’ படத்தின் தலைப்பு;    ரத்தக் கறை படிந்த கத்தியுடன் படக்குழு  வெளியிட்ட வெறித்தனமான போஸ்டர்!!!

‘அண்ணாத்த’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘தலைவர் 169’ படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். நெல்சன் இயக்கவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளார். இத்தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் உறுதிபடுத்தி இருந்தார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில் நீண்ட நாளாக எந்த விதமான அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில் படத்தின் தலைப்பைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி தலைவர் 169 படத்திற்கு ஜெயிலர் என்று பெயரிட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன் இரத்தக் கரை படிந்த கத்தி போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியான நிலையில் தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் படத்திற்குப் படக்குழு ஜெயிலர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

  • 415 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !