“தாய் கிழவி…” – நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு வெளியான தனுஷ் பாடல்!!

 “தாய் கிழவி…” – நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு வெளியான தனுஷ் பாடல்!!

செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் ‘வாத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படத்தின் முதல் பாடலான தாய் கிழவி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்பாடலை அனிருத் இசையில் தனுஷ் எழுதிப் பாடியுள்ளார். கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணியில் வெளியாகியுள்ள இந்த தாய் கிழவி பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

  • 5 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !