போயஸ்கார்டன் to ஸ்டூடியோ; ரிகர்சலுக்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கைதட்டி பாடல்களை ரசித்தார்!
தேர்தல் களம் 2021: கம்பம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி யாருக்கு ?

தமிழக சட்டசபைக்கு தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், தி.மு.க. ஒரு கூட்டணியாகவும், களத்தில் நிற்கின்றன. இதுதவிர அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவையும் நிற்பதால் தேர்தலில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
.அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகின்றனர்.
திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஏப்ரல் 6, 2021ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களாக இங்கு கம்பம் ராமகிருஷ்ணன் (திமுக), சையதுகான் (அதிமுக), வேத வெங்கடேஷ் (மநீம), அ அனிஸ் பாத்திமா (நாதக), பி.சுரேஷ் (அமமுக) மற்றும் பல சுயேச்சைகள் போட்டியிடுகிறார்கள்.
தேனி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை: 2,85,574ஆண்: 1,39,619பெண்: 1,45,918மூன்றாம் பாலினம்: 37
இந்தநிலையில் பிரபல விகடன் பத்திரிக்கை நடத்திய அறிக்கை படி அதிமுக 70%, திமுக 90% அமமுக 23%, மநீம4%, நாதக13%, வெற்றி வாக்குகளை பெற்று உள்ளனர்.
