தமிழ்நாட்டில் மறுபடியும் லாக்டவுனா?.. முதல்வர் இன்று ஆலோசனை!

 தமிழ்நாட்டில் மறுபடியும் லாக்டவுனா?.. முதல்வர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் கடந்த மே 7-ந்தேதி புதிய அரசு பதவி ஏற்றபோது கொரோனா தொற்று பரவல் அதிகரித்தபடி இருந்தது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்து சென்றது.

அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் மே 10-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா தொற்றின் தாக்கம் குறையாத நிலையில், முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மே 24-ந்தேதி முதல் ஜூன் 7-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்கும் அந்த கூட்டத்தில் தமிழகத்தின் தற்போதைய கொரோனா நிலவரம் பற்றி தீவிரமாக ஆய்வு செய்யப்படுகிறது. கொரோனா தொற்று 4 மாவட்டங்களில் மிக அதிகமாக இருப்பதால் அந்த மாவட்டங்களில் அடுத்தக்கட்டமாக எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது பற்றி நாளைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட இருக்கிறது.

அடுத்த செப்டம்பர் 1-ந்தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில், தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 • 37 Views

  In and Out Staff

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !