ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் ‘#ஜெய்பீம்’ மோஷன் போஸ்டர்!

 ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும்  ‘#ஜெய்பீம்’ மோஷன் போஸ்டர்!

தா.சே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்து வரும் அவரது 39வது படத்துக்கு ‘ஜெய் பீம்’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாகி பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றுள்ளது. சூர்யா இந்தப் படத்தில் ழங்குடியின மக்களுக்காக குரல் கொடுக்கும் வக்கீலாக சூர்யா நடித்துள்ள இப்படத்தில், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

சூர்யாவின் 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்தப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தார். 

இப்படம் வரும் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. அதற்கான முன்னோட்டமாக படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு நேற்று (11.10.2021) மாலை வெளியிட்டது. ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த இந்த மோஷன் போஸ்டர், யூட்யூப் ட்ரெண்டிங்கில் 9வது இடத்தில் உள்ளது.

  • 52 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !