பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘#வணங்கான்’ !!- வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !

எதற்கும் துணிந்தவன்’ படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் ‘சூர்யா 41’ நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க, சூர்யாவின் தங்கை கதாபாத்திரத்தில் மலையாள நடிகை மமீதா பைஜூ நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. மீனவர் சமூகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
‘சூர்யா 41’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் சூர்யாவைத் தவிர, கிருத்தி ஷெட்டி, மமிதா பைஜு ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை சூர்யா தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
இந்நிலையில் பாலா இன்று தனது 56-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு சூர்யா 41 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானது.
இந்த படத்திற்கு வணங்கான் என பெயர் வைத்துள்ளனர். இதனை படத் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வணங்கான் டைட்டில் வெளியானதை தொடர்ந்து, சூர்யா ரசிகர்கள் இதனை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.