சூர்யாவிற்கு பார்சலில் வந்த சர்ப்ரைஸ்! குவியும் வாழ்த்துக்கள் …

 சூர்யாவிற்கு பார்சலில் வந்த சர்ப்ரைஸ்! குவியும் வாழ்த்துக்கள் …

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படம், கடந்த நவம்பர் மாதம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தற்போது இந்தியிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்ட படக்குழு, முதற்கட்ட பணிகளில் கவனம் செலுத்திவருகிறது.

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த படத்திற்கான விருதை வென்றது. மேலும், சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவிற்கு கிடைத்தது. கரோனா பெருந்தொற்று காரணமாக இந்த விருது விழா இணையம் வழியாக நடைபெற்ற நிலையில், தற்போது இரு விருதுகளையும் விழா கமிட்டியினர் பார்சலில் அனுப்பிவைத்துள்ளனர்.

அந்தப் பார்சலைத் திறந்து இரு விருதுகளையும் சூர்யா பெற்றுக்கொண்டபோது எடுத்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக இரு விருதுகள் பார்சலில் வந்தது, ‘சூரரைப் போற்று’ படக்குழுவினருக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.   

  • 40 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !