‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் ஷூட்டிங் UPADTE… ரிலிஸ் எப்போ தெரியுமா?

 ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் ஷூட்டிங் UPADTE… ரிலிஸ் எப்போ தெரியுமா?

’சூரரைப் போற்று’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ’சூர்யா 40’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண் உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் சூர்யா புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்தன. சூர்யா ரசிகர்களும் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் கேட்டு இயக்குநர் பாண்டிராஜிடம் கோரிக்கை வைத்துக்கொண்டே வந்தனர்.

இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை எதிர்பார்த்திருந்த நிலையில், சூர்யாவின் பிறந்தநாளையொட்டி இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் டைட்டிலும் வெளியாகி இருக்கிறது. “எதற்கும் துணிந்தவன்” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் தலைப்புக்கேற்ப ஃபர்ஸ்ட் லுக் டீசரில் சூர்யா கெத்தாக நீண்ட வாளை சுழற்றுகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி பகுதியில் நடைபெற்று வந்தது. வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் காரைக்குடி படப்பிடிப்பு நிறைவடைகிறது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இன்னும் 8 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளதாகவும், அதுவும் செம்டம்பர் மாத இறுதியில் நிறைவடையும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இந்த 2021ஆம் வருடமே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இந்த படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • 664 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !