பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஜோடியாகும் சன்னிலியோன்!

 பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஜோடியாகும் சன்னிலியோன்!

இந்திய அணியில் ஆக்ரோஷமாக செயல்படும் வீரர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீசாந்த். இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற 2007 மற்றும் 2011 ஆகிய இரு தொடர்களிலும் அணியில் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் இவர் ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சொல்லி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டார். அதன் பின் சட்ட ரீதியாக பல போராட்டங்களை நடத்தி 7 ஆண்டுகாலமாக அதை குறைத்தார்.

இப்போது அவரது தண்டனைக் காலம் செப்டம்பர் மாதத்தோடு முடியும் நிலையில் உடல்தகுதியை நிரூபித்தால் அவர் கேரள ரஞ்சி அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

இந்நிலையில் இப்போது அவர் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமாக உள்ளார். அந்த படத்தில் நடிகை சன்னி லியோனும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம். பட்டா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம் ஒரு திரில்லர் படமாக உருவாக உள்ளதாம். ஸ்ரீசாந்த் ஏற்கனவே மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.

 • 1221 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !