#ரெஜினா: எனது படங்களில் முக்கிய படமாக இது இருக்கும் – சுனைனா!!

மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ரெஜினா”. இப்படத்தில், சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். எல்லோ பியர் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைக்கிறார்.
இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ். ஆர் எழுதியுள்ளனர். இப்படத்தை பவி கே. பவன் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்
இதைத்தொடர்ந்து, படம் குறித்து சுனைனா கூறுகையில், “ரொம்ப சாதாரண ஹவுஸ் வொய்ஃப் ஆக ரெஜினா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ரெஜினாவை சுற்றி நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள் தான் இக்கதை. டைரக்டர் டோமின் டி. சில்வா என் கேரக்டரை சூப்பராக வடிவமைத்திருக்கிறார். கதையை அவர் சொல்லும் போதே, இந்த படத்தை பார்க்க எனக்கே ஆவலை தூண்டியது.
டைரக்டருடைய முந்தைய ஹிட் படங்களான “பைபிள் சுவத்திலே பிராணயம்”, “ஸ்டார்” போன்ற படங்களை விட “ரெஜினா” படத்தின் திரைக்கதையை ஸ்டைலாக அமைத்துள்ளார். எனது படங்களில் “ரெஜினா” முக்கியமான படமாக இருக்கும்” என்றார். இயக்குனர் டோமின் டி சில்வா “ரெஜினா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.