ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக்கின் அடுத்த படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!!
சருமத்தை கோடைகாலத்திலிருந்து எளிய முறையில் பராமரிப்பது எப்படி…?qq

குளிர் காலம் போய் கோடை காலம் ஆரம்பமாகி விட்டது. நமது சருமத்தை ஒவ்வொரு கால கட்டத்திற்கு ஏற்ற வகையில் பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. தடிமனான ஆடைகளை எல்லாம் தள்ளி விட்டு கோடை காலத்தில் பருத்தி ஆடைகளை அணிய ஆரம்பித்து விடுவோம். அதே மாதிரி உங்க சரும பராமரிப்பு அழகு பொருட்களையும் நீங்கள் மாற்ற வேண்டியிருக்கிறது.
கோடைக்காலத்தில் சரும பராமரிப்புக்கு செய்ய வேண்டியது என்ன என்பது குறித்தும் பார்க்கலாமா?
தக்காளியை மசித்து அதனுடன் தயிர் மற்றும் தேன் கலந்து முகத்தில் போடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். வாரம் ஒரு முறை செய்து பாருங்கள். உங்கள் நிறம் பொலிவு பெறும்.
வெள்ளரிக்காயை அரைத்து அதனுடல் பால் கலந்து மாஸ்க் போல் போட்டு வாருங்கள். வாரம் மூன்று நாட்கள் இப்படி செய்து வந்தால் முகம் எந்த வித தழும்பின்றி பிரகாசமாக இருக்கும். படிப்படியாக நிறம் மெருகேறுவதை காண்பீர்கள்.
குங்கமப்பூவை சில நிமிடங்கள் ஊற வைத்து அதனை நன்றாக குழைத்துக் கொள்ளுங்கள். அதில் பால் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் அழகு பெறும். நிறத்தை அதிகரிக்கச் செய்யும்.
தண்ணீர் குடிப்பது அவசியமாகிறது. அதே மாதிரி கோடை காலத்தில் கிடைக்கும் முலாம்பழம், தர்பூசணி போன்றவற்றையும் சாப்பிடுங்கள். இது உங்க சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவும்.