‘என் இனிய நண்பர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!’ – மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

 ‘என் இனிய நண்பர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!’  –  மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் தோட்ட வீட்டில் ரசிகர்களை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டு இருக்கிறார். ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

  • 4 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !