Category: Sports

‘ஐசிசி’ விருதுகள் அறிவிப்பு…விருதை தட்டிச் சென்ற ‘இளம்’ வீரர்!!… முழு விவரம் உள்ளே!!

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த ஒருநாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணிக்கான வீரர்களைத் தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று அறிவித்துள்ளது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐசிசியின் கடந்த 10 ஆண்டுகளுக்கான சிறந்த ஒருநாள், டி20, டெஸ்ட் அணியில் இடம் பெற்ற வீரர்களைக் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் தலைசிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்ல் தலைசிறந்த வீரராக இந்திய அணி […]

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் ஒத்தி வைப்பு: பிசிசிஐ வட்டாரங்கள்

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மார்ச் 29ம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கை மே 3ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி இன்று காலை அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், ஐபிஎல் போட்டிகளும் மே 3 வரை ஒத்தி […]

ஐபிஎல் காத்திருக்கட்டும்… சுரேஷ் ரெய்னா!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி நடக்க இருந்த ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அதற்கு மறுநாளே ஐபிஎல் போட்டி நடத்துவது என்பது சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா இது தொடர்பாக அவர் கூறியதாவது;- உலகம் முழுவதும் […]

கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் டூப்லெசிஸ்..!

தொடர் தோல்விகளால் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் தென்னாபிரிக்க வீரர் டூப்லெசிஸ். கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் அடைந்த தோல்வியினால் தனது ஒரு நாள் கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருந்தார் டூப்லெசிஸ். இந்நிலையில் டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கும் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.ராஜினாமா குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டு இருந்தார் அதில்” இத்தனை நாள் என் நாட்டின் அணியை வழி நடத்தி சென்றது என் வாழ்நாளில் மிகவும் பெருமையானதாக […]

நியுசிலாந்துக்கு 180 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி…

ஹாமில்டனில் (Hamilton) நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மாவும், கே.எல். ராகுலும் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக ரோஹித்தின் ஆட்டத்தில் அனல் பறந்தது. சிறப்பாக ஆடிய அவர் 23 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 65 ரன்னிலும், கேஎல் ராகுல் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பிறகு வந்த வீரர்களில் […]

இந்தியாவுடன் தாக்குப்பிடிக்குமா இலங்கை??

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி நாளை கவுஹாத்தியில் நடைபெற உள்ளது. இலங்கை அணி கடந்த 2019 ஆம் ஆண்டில் மிகவும் சொற்ப வெற்றிகளையே பெற்றது. இந்திய அணிக்கு கடந்த 2019 ஆண்டு சிறப்பாகவே அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒரு பலம் வாய்ந்த அணியாக இந்திய அணி திகழ்கிறது. மேலும் இந்த ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. எனினும் ஷிகர் […]

புத்தாண்டு கொண்டாட்டம்!தோனி நடனமாடும் வீடியோ!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களுள் ஒருவரான தோனிக்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளனர்.அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தல தோனி அவர்களுக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இவர் தனது மனைவி சாக்ஷியுடன் இனைந்து தற்போது விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.இவர்கள் இருவரும் அனைவர் மத்தியிலும் சிறந்த ஜோடியாக விளங்கி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தில் தனது மனைவியுடன் நடனமாடியுள்ளார்.அதன் பிறகு புத்தாண்டு பிறந்ததும் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் பரிமாறி கொண்டார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிக […]

INDvsWI அணிகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி…

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் ஆர்வத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி உள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய 9 ஒருநாள் தொடரையும் இந்தியா கைப்பற்றியிருந்தது. அந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணியில் சகால் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாக […]

திருவள்ளுவராக பிரபல கிரிக்கெட் வீரர் !

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தமிழ், ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ‘பிளாக் ஷீப்’ என்ற தமிழ், ‘யூ டியூப்’ சேனலில், திருவள்ளுவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இது குறித்து, அவர் கூறுகையில், ”வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அறிவுரைகளும், திருக்குறளில் கூறப்பட்டு உள்ளது. இவற்றை சுவாரஸ்யமாக சொல்வது தான், இத்தொடரின் நோக்கம். ஜன., 2 முதல், தொடர் ஒளிபரப்பாகும்,” என்றார்
Page 1 of 2012345 » 1020...Last »
Inandoutcinema Scrolling cinema news