மிஷ்கினுடன் கைகோர்க்கும் எஸ்.ஜே.சூர்யா? வெளியான புதிய தகவல் !

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மிஷ்கின், பிசாசு 2 படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்க, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்

கடந்த ஆண்டின் இறுதியில் பூஜையுடன் படப்பிடிப்பைத் தொடங்கிய படக்குழு, தற்போது மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. 

இந்நிலையில், மிஷ்கின் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் இயக்க உள்ள புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பிசாசு 2 படத்தை தயாரித்துவரும் ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்க உள்ளதாம். மேலும் இப்படத்தில் நடிகர் வித்தார்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 4 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !