‘#சிவகுமாரின்சபதம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

 ‘#சிவகுமாரின்சபதம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி, மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்தார். அப்படத்திற்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பையடுத்து, நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆதி, தற்போது சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில், ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ள சிவகுமாரின் சபதம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, சிவகுமாரின் சபதம் திரைப்படம் இந்த மாத இறுதியில் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை வரிசையாக வெளியிட்டுவரும் படக்குழு, விரைவில் படத்தின் ட்ரைலரை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. 

சிவகுமாரின் சபதம் படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் என அனைத்து பணிகளையும் ஹிப்ஹாப் ஆதியே கவனித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

  • 7 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !